தேவாரம் - மந்திரமாவது நீறு..
உ 02.066 மந்திர மாவது நீறு அ௫ளியவர் : திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை; பண் : காந்தாரம் நாடு : பாண்டியநாடு; தலம் : ஆலவாய் (மதுரை) சிறப்பு: திருநீற்றுப்பதிகம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே . 1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே . 2 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே . 3 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தர...