இடுகைகள்

திருப்புகழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஶ்ரீகுரு அருணகிரியார் அருளிய திருப்புகழ் - முத்தைத்தரு... வரிகள்

  " அருணகிரிநாதர்   அருளிய   திருப்புகழ்   -- 3" - " முத்தைத்தரு "   இராகம் : கௌளை தாளம் : திஸ்ர த்ருபுடை / மிஸ்ரசாபு தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான   முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை ...

திருப்புகழ் - சினத்தவர் முடிக்கும்

  திருப்புகழ் சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்      செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்      திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்   நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்      நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்   நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்      நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்   தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்      தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி   தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்      தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்   சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்      சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா   தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்      திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே .

திருக்கயிலை திருப்புகழ்

  திருப்புகழ் 518 - கயிலைமலை   தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்      சீரும் பழித்தசிவ ...... மருளூறத் தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ      சீவன் சிவச்சொருப ...... மெனதேறி (தேனுந்து – மெனதேறி) நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி      நாதம் பரப்பிரம ...... வொளிமீதே ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ      நாளுங் களிக்கபத ...... மருள்வாயே (நானென்ப - மருள்வாயே) வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்      மாலும் பிழைக்கஅலை ...... விடமாள வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு      மானின் கரத்தனருள் ...... முருகோனே தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது      தானுண் கடப்பமல ...... ரணிமார்பா தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை      சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே . (தானந் - பெருமாளே) ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ      நாளு...

அவனிதனிலே பிறந்து... திருப்புகழ்

  திருப்புகழ் 110; அவனிதனிலே …   (தலம்; பழநி)   அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து      அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்   அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று      அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்   சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்      திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்   தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று      திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்   மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை      மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்   மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த      மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா   பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து      படியதிர வேந டந்த ...... கழல்வீரா   பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து      பழநிமலை ...

ஶ்ரீகுரு அருணகிரிநாதரின் வேல்விருத்தம்

  திரு அருணகிரிநாதரின்  -  வேல் விருத்தம்   மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி    மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல    மகிழ்வுபெறு மறுசிறையவாஞ் சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு    செநெல்களொடு தரளம் இடவே செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி    திடர்அடைய நுகரும் வடிவேல் தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி    தருகவுளும் உறுவள் எயிறுந் தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்    தருதுணைவன் அமரர்குயிலுங் குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்    குயமொடமர் புரியுமுருகன் குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்    குலையவிடு கொடியவேலே .                                              ...