அகத்தியர் மந்திர வாள்
அகத்தியர் மந்திர வாள் என்னும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் அருளிச்செய்த அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள் : " வசி - வசி " யென்று நிதஞ் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமு முண்டாம் " நசி - நசி " யென்று நிதஞ் செபித்தாயாகில் நலமெல்லாம் சூழும் , வினைகள் நாடா நிற்கும் " மசி - மசி " யென்று தினமும் செபித்தாயானால் மகத்தான விஷம் முதலான ரோகந்தீரும் " கசி - கசி " யென்று நிதந் செபித்தாயானால் கனத் தெழுந்த சிலந்தி புண்கள் கரைந்துபோம் " அங்கிலி - சவ் - சிசி " யென்ன பொல்லாத மிருகமெல்லாம் ஓடிப் போகும் " அய்யுஞ் - சவ்வும் - கிலிவா " வென்ன அடங்கா மிருக மெல்லாம் அடங்கி நிற்கும் " " கிலி - அங்சவ் - ரங்ரங் " என்று கூற பட்சி யெல்லாம் ஒடுங்கி நிற்கும், என்று மந்திரங்கள் வசமாகும் விஷயங்களை அகத்தியர் பெருமான் தனது மந்திர வாள் நூலில் சொல்கிறார் . (1) " நசி , மசி " என்றிட எமனையும் வெல்லலாம் . (2...