தானெனை முன்படைத்தான்... சுந்தரர் தேவாரம்
அ௫ளியவர் : சுந்தரர் திருமுறை : ஏழாம் - திருமுறை பண் : பஞ்சமம் நாடு : வடநாடு தலம் : கயிலாயம் ( நொடித்தான்மலை ) சுவாமி : கைலாயநாதர் ; அம்பாள் கைலாயநாயகியம்மை . தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே . 1 ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே . 2 மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த துந்தர மோநெஞ்ச மேநொடித் ...