தொழில் வசிய மந்திரம்
இணையத்தில் படித்தவை "வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி சகலரும் வசி", இம்மந்திரத்தை 18 முறைகள், கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்தபடி சொல்லிவந்தால், முக வசீகரம் உண்டாகி, அன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன். அனைவரையும் வசீகரிக்கவேண்டும் என்றால், பின்வரும் ஆன்மீகப் பயிற்சியை குறைந்தது 90 நாட்கள் காலை, மாலை என இருவேளை, ஒரு தரைவிரிப்பின் மீது நின்றோ அல்லது அமர்ந்துகொண்டோ, ஒரு கிராம்புத் துண்டை வாயினுள், வலதுபக்கமாக ஒதுக்கிவைத்துக்கொண்டு, கடித்துவிடாமல், மனதுக்குள், உதடுகள் அசையாவண்ணம் 4 திசைகளையும் நோக்கி தலா 108 முறை, " ஓம் ரீங் வசி வசி ", என ஜெபம் செய்திட வேண்டும். பின்னர், அந்த கிராம்பை துப்பிவிட வேண்டும். பின்பு, ஒரு டம்ளர் இளநீர் பருகவேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவாகவும், அசைவம் உண்பவர்களுக்கு தாமதமாகவும் இம்மந்திரம் செயல்படத் துவங்கும். நீங்கள் சைவம் எனில், 91வது நாள் முதல் நீங்கள் செய்யும் பணி அல்லது தொழிலில் மிகவும் பிசியாகிவிடுவீர்கள். பொதுவாக, இம்மாதிரி செயல்களில் ஈடுபடும்போது, வினைகளின் இறைவன் விநாயகனை வேண்டி, கு...