அப்பர் தேவாரம் - ஒன்று கொலாம் - விடம் தீர்த்த பதிகம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் - திருமுறை பண் : இந்தளம் நாடு : பொது தலம் : பொது சிறப்பு : — விடந்தீர்த்ததிருப்பதிகம் ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே . 1 இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவர் எய்தின தாமே . 2 மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண் மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே . 3 நாலுகொ லாமவர் தம்முக மாவன நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் நாலுகொ லாம...