திருக்கயிலை திருப்புகழ்

 

திருப்புகழ் 518 - கயிலைமலை

 

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்

     சீரும் பழித்தசிவ ...... மருளூறத்

தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ

     சீவன் சிவச்சொருப ...... மெனதேறி (தேனுந்து – மெனதேறி)

நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி

     நாதம் பரப்பிரம ...... வொளிமீதே

ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ

     நாளுங் களிக்கபத ...... மருள்வாயே (நானென்ப - மருள்வாயே)

வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்

     மாலும் பிழைக்கஅலை ...... விடமாள

வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு

     மானின் கரத்தனருள் ...... முருகோனே

தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது

     தானுண் கடப்பமல ...... ரணிமார்பா

தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை

     சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே. (தானந் - பெருமாளே)

ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ

     நாளுங் களிக்கபத ...... மருள்வாயே

தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை

     சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.

நாளுங் களிக்கபத ...... மருள்வாயே

நாளுங் களிக்கபத ...... மருள்வாயே

 

 

கருத்துகள்