ஶ்ரீகுரு பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திரபந்தம் - வரிகள்
சஸ்திர பந்தம்
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா
இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக