பர்வதமலை ஶ்ரீபிரம்மராம்பிகை பாடல்
உ
ஶ்ரீபர்வதமலை
பிரம்மராம்பிகை பாடல்
பாடலாசிரியர்; திரு.S.R.பாவலன்
பர்வதமலையில் வாழும் எங்கள்
பிரம்மராம்பிகையே சரணமம்மா
உனையன்றி எங்களை காப்பது யாரோ
பிரம்மராம்பிகையே சரணமம்மா
பர்வதமலையில் வாழும் எங்கள்
பிரம்மராம்பிகையே சரணமம்மா
உனையன்றி எங்களை காப்பது யாரோ
பிரம்மராம்பிகையே சரணமம்மா
பனிமுகில் சூழ்ந்துள்ள பர்வதமலையில்
கருணையின் மழையை பொழிபவளே
திங்களைச் சூடிய கங்கையைக்
கொண்டவன் அருகினில் இருந்து அருள்பவளே
பனிமுகில் சூழ்ந்துள்ள பர்வதமலையில்
கருணையின் மழையை பொழிபவளே
திங்களைச் சூடிய கங்கையைக்
கொண்டவன் அருகினில் இருந்து அருள்பவளே
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
தாய்மடி மீது குழந்தைகள் போல
பர்வதமலையில் தவழுகிறோம்
தவறிடும் நேரம் அன்னையின்
கைகள் தாங்கிட அன்பை உணருகிறோம்
ஐம்பொன் பவழம் மாணிக்கம் முத்து
வைரம் அனைத்தும் அம்பிகையே
எங்களின் தேவை பொன் பொருள்
அல்ல என்றும் அம்மா உன் அருளே
விதையாய் மரமாய் காயாய் கனியாய்
நிழலாய் நிற்பதும் அம்பிகையே
கனவாய் நினைவாய் உடலாய் உயிராய்
இரண்டறக் கலந்ததும் அம்பிகையே
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
காற்றாய் நீராய் நிலமாய் நெருப்பாய்
வளியாய் அனைத்தும் அம்பிகையே
நேற்றாய் இன்றாய் நாளைய பொழுதாய்
நகர்ந்திடும் காலம் அம்பிகையே
உயர்வாய் தாழ்வாய் தொடரும்
வாழ்வாய் வழித்துணையானதும் அம்பிகையே
கடலாய் அலையாய் படகாய் இருந்து
கரைகொண்டு சேர்ப்பதும் அம்பிகையே
நல்லறிவோடும் உடல்பலத்தோடும்
உதவிடும் மனமும் நீ கொடுப்பாய்
புல் பூண்டாக பிறப்பதென்றாலும்
பர்வதமலை மேல் இடம் கொடுப்பாய்
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
மஞ்சள் முகமும் மங்கல சிரிப்பும்
கண்டதும் நெஞ்சம் இனிக்கிறதே
எங்களின் சுமைகள் உன்னிடம்
தந்தோம் உள்ளம் கொஞ்சம் உறங்கியதே
சந்திர சூரியன் மண் உள்ள காலம்
தாண்டியும் பர்வதம் நிலைக்குமம்மா
அன்றும் இறைவன் எங்களைப் படைத்தால்
பாதம் பர்வதம் ஏறுமம்மா
அமாவாசையில் பர்வதமலையில்
அம்பிகை மூக்குத்தி ஜொலிக்கிறதே
பகல்பொழுதாக இருளும் நீங்கி
எங்களின் வாழ்வும் விடிகிறதே
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி
சக்தி ஒம்சக்தி சிவசக்தி பர்வதகிரி சக்தி
(பர்வதமலையில் ………………………………………………………………..சக்தி)
Parvathamalai - Aagayathil Oru Aalayam - Combined Video
கருத்துகள்
கருத்துரையிடுக