பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி - ஜோதிடம்
பசுக்கள், கல்வி தந்த ஆசிரியர், வழிகாட்டியவர்கள், பிராமணர்கள், சாதுக்கள், சிவபக்தர்கள், சிவனடியார்கள், எளியவர்கள், பெண்கள் ஆகியோர்களுள் எவரேனும் ஒருவரை கொன்றால் இந்த பிரம்மஹத்தி தோஷமானது செயல்படும்.
சரி, பிராமணர்கள் என்ற வார்த்தைக்கு பொருள், பிரம்மத்தை உணர்ந்தவர் பிராமணர். எல்லாம் இறைவனே என்று, எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காத செம்மை மனமும் சிந்தனையும் கொண்டவர். பிறப்பால் அனைவருமே சத்திரியர்கள் தான் என்கிறது முன்னோர் வாக்கு. ஆனால், எவர் பிரம்மத்தை உணர்கிறாரோ அவர் யாராகிலும் பிராமணர். அஃது பயிற்சியாலோ, முயற்சியாலோ தானே தவிர செய்யும் தொழிலும், குலமும் துணை செய்யாது. ஆக, அப்படி, இறைதொண்டு புரிகின்ற பிராமண நிலையில் வாழ்கின்றவர்களை வதைத்து கொலை செய்கின்றவர்களை, இந்த பிரம்மஹத்தி தோஷம் பீடித்துக்கொள்கிறது. ஆட்டிசம் என்று சொல்லப்படுகின்ற வியாதி கூட இதன் வெளிப்பாடே !
பிரம்மஹத்தி தோஷத்துடன் பிறந்தவர்கள், ஒழுங்கற்ற உருவம், பிறப்புறுப்பில் ஆர்வம், தனிமை தேடுதல், மனநலக் கோளாறு, நீளமான பிறப்புறுப்பு போன்றவைகளால் பாதிப்படைவர்.
தோஷத்திற்கு ஆளானவர்கள் சுபிட்சமாக இருக்கமாட்டார்கள். பயணத்தில் கவனமாக இருக்கவேண்டும். உருவத்தில் ஆமை, தேவாங்கு போல் இருப்பர்.
நம்முடைய புராணங்கள் பலவும் இவற்றை மிகவும் வலியுறுத்திச் சொல்லிவருகிறது. சிவபெருமான், முருகன் ஆகிய தெய்வங்கள் கூட விதிவிலக்கல்ல என்பது ஆன்றோர்கள் அறிந்ததே. இந்த தோஷமானது, ஒருவரின் பரம்பரை முழுதும் செயல்படுகிறது. இந்த 2025லும் கூட நடப்பிலுள்ளது. இன்றைய காலகட்டத்தில் வாழும் யாரோ ஒருவரின் முன்னோர் செய்த செயல்களுக்கு, இவர்கள் பதில் சொல்லும் நிலை. ஆக, அப்பேர்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திற்கு முடிவுரை எழுதுவது எளிதல்ல என்றாலும், மழையில் முழுதாக நனையாமல், குடை ஒன்றின் மூலம் சிறிதாக நனைந்துகொள்ளலாம் அல்லவா !
தோஷ நிவர்த்திக்கு; திருவிடைமருதூர்.
ஒருவரின் ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்து இருப்பது. குருவின் 5,7,9 ஆமிட பார்வைகளில் சனி இருப்பது, சனியின் 3,7,10 ஆமிட பார்வைகளில் குரு இருப்பது.
காளியாகுடி – காளிக்கு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி
கச்சனம் – அகத்தியருக்கு தோஷ நிவர்த்தி
திருவிடைக்கழி – முருகனுக்கு தோஷ நிவர்த்தி
இராமேஸ்வரம், காமேஸ்வரம் – இராமனுக்கு தோஷ நிவர்த்தி
பரிகாரம்;
- பசுவுக்கு உணவளிக்கலாம்.
- ஏழை பிராமணர்களுக்கு, கவனிக்கவும், ஏழை பிராமணர்களுக்கு அரிசி, தேங்காய், பழம், ஆடை, பஞ்சபாத்திரம், தட்சணை என்று தரவேண்டும். எப்படி தரவேண்டும், எங்கே வைத்து தந்தால் சிறப்பு என்பதை உங்கள் அருகாமையில் உள்ள ஜோதிட வல்லுநர்களிடம் ஆலோசித்து செய்துகொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக