வாஸ்து
கட்டிடக்கலை பூமியின் சாய்மானத்தைக் கொண்டு (23டிகிரி) அதற்கேற்றாற்போல எழுப்பப்படுகின்ற கட்டிடம் மட்டுமே நிலையாக லட்சுமி கடாட்சமாக, சந்தோஷமாக இருக்கும். பூமியே வாஸ்து புருஷன். கட்டிடம் சதுரம், நீண்ட சதுரமாக இருக்கலாம். அந்த இடத்தில் தென்மேற்கு மூலை உயர்ந்தும், வடகிழக்கு மூலை தாழ்ந்தும் கட்டப்படுகின்ற கட்டிடங்களில் வாஸ்து செல்லும். வாஸ்து புருஷன் குறிப்பிட்ட பாதங்களில், குறிப்பிட்ட தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து, பல் துலக்கி, பூஜை செய்து, உணவருந்தி தாம்பூலம் தரிப்பார். உணவருந்தும் மற்றும் தாம்பூலம் தரிக்கும் நேரத்தைக் கண்டுபிடித்து 18 நிமிடமே கால அளவாகும். அதில் வாஸ்து பூஜையைச் செய்ய வேண்டும். எப்பொழுதெல்லாம் வாஸ்து நாட்கள் வருகின்றனவோ, அஷ்டமி, செவ்வாய், சனிக்கிழமை, ராகுகாலம், எமகண்டம் நிச்சயம் இருக்கும். வாஸ்து பூஜைக்கு வாஸ்து நேரம் மட்டுமே பார்க்கவேண்டும். இதர நேரங்களை பார்க்கக்கூடாது. குரு ஹோரையில் எமகண்டம் வந்தால் குரு ஹோரையைத்தான் பார்க்கவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக