மகான் ஶ்ரீகோரக்கர் சித்தர் யார்?
குருவே சரணம் ! ஓம் நமசிவய ! ஓம் சிவயநம ! மகான் ஶ்ரீகோரக்க சித்தர் யார்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் சித்தர் வழிபாட்டில் புதிதாக இணைபவர்களுக்கு தோன்றும். நியாயமே ! காரணம், நாம் பயிலும் பாடபுத்தகங்களிலோ அல்லது தினசரிகளிலோ தமிழ்தேசத்தின் அல்லது இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பெருமைமிக்க சித்தபுருஷர்களின் அற்புதங்கள், சேவைகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டிருக்குமேயானால், நிச்சயம் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், இஸ்லாமியர்கள் என பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டு சக்திகளால் இந்த தேசம் ஆட்சி செய்யப்பட்ட காரணங்களால் கோடிக்கணக்கான வரலாற்றுப் பதிவுகள் நமக்கு கிடைக்காமலே போய்விட்டது. இருப்பினும், காலச்சக்கரம், அறிவியல் கண்டுபிடிப்புகளின் வழியே இறைவனின் அனுகிரகத்தால் நம் கண்களில் பட்டு, நம் அறிவை எட்டிவிடும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அந்த வகையில், இந்திய தேசம், குறிப்பாக, பாரத தேசம் கடந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அன்று முதல் இன்று வரை சித்தர்கள் தோன்றி, மானுட சமூகங்களுக்கு பலப்பல நன்மைகளை செய்துவருகின்றனர். அப்படியாக, நமது பாரத தே...